Food

Weight Loss Foods : உடல் எடையை குறைக்க 10 உணவுகள்.!

இன்றைய நவீன காலகட்டத்தில் மனிதர்களால் மாற்றியமைக்கப்பட்ட உணவு பழக்கங்கள், வியர்வை சிந்தாமல் உழைக்கும் வேலை மற்றும் அதிகம் துரித உணவுகளை உட்கொள்வது போன்ற பல காரணங்களால் உடல் எடை நம் கட்டுப்பாட்டை மீறி அதிகரித்து விடுகிறது. சராசரியாக ஒரு மனிதனின் உயரத்திற்கு ஏற்ப எடையானது இருக்க வேண்டும். நமது உடலின் எடை நம்முடைய கட்டுப்பாட்டை மீறி அதிகமாக இருப்பது உடல் பருமன் எனப்படுகிறது. உடல் பருமன் அதிகமாக இருந்தால் நிறைய உடல்நல பிரச்சனைகளை நாம் அன்றாட வாழ்வில் சந்திக்க நேரிடும். ஒரு நாளைக்கு நம் உடலுக்கு தேவையான சராசரியான கலோரியின் அளவைவிட அதிகமான கலோரியை நாம் உட்கொள்ளும் பொழுது அவை நமது உடலில் கொழுப்பாக மாறி உடல் பருமனை அதிகரிக்கிறது. உடல் எடையை குறைப்பதற்கு மிகக் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளாமல் நாம் அன்றாட வாழ்வில் எடுத்துக் கொள்ளும் சில உணவுப் பொருட்களைக் கொண்டு உடல் எடையை எளிமையாக குறைக்க முடியும். உடல் எடையை விரைவாக குறைப்பதற்கு நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய (Weight Loss Foods) சில உணவுப் பொருட்களைப் பற்றி இந்தப் பதிவில் விரிவாக காண்போம்.

உடல் எடையை குறைக்க உதவும் சிறந்த 10 உணவுகள்:-

1. கொய்யாப்பழம்:-

Guava fruit for weight loss
Image by jeswin on Freepik

கொய்யா பழமானது நாம் திரும்பும் திசைகளில் எல்லாம் நமக்கு எளிமையாகவும் விலை மலிவாகவும் கிடைக்கும் ஒரு பழவகை ஆகும். இவ்வாறு கிடைக்கும் இந்த கொய்யாப்பழத்தில் கலோரி மிகக் குறைவாகவும் நார்ச்சத்து மற்றும் புரதம் ஆகியவை மிகுந்தும் காணப்படுகிறது. கொய்யா பழத்தை நாம் சாப்பிட்ட பிறகு ஜீரணம் ஆகுவதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும். இதன் காரணமாக நமக்கு விரைவாக பசி ஏற்படாது. உடல் எடையை குறைக்க விரும்புவோர் இந்த பழத்தை சாப்பிடலாம்.

2. முட்டைகள்:-

Eggs are essential for health for weight loss
Image by jcomp on Freepik

முட்டைகளில் அதிக அளவிலான புரதங்கள் நிறைந்து காணப்படுகிறது. தினமும் காலை உணவாக முட்டைகளை சாப்பிட்டு வர அந்த நாள் முழுவதற்கு தேவையான சக்தி நமக்கு இதிலிருந்து ஆற்றலாக கிடைக்கிறது. இதனால் நமக்கு பசி ஏற்படும் உணர்வை தடுத்து அதிகப்படியான கலோரி உட்கொள்வதை தடுக்க முடியும். உடல் எடையை குறைப்பதற்கும் அல்லது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க விரும்புபவர்கள் முட்டைகளை சாப்பிட்டு வர உடல் எடை வேகமாக குறையும்.

3. கிரீன் டீ:-

Hot green tea on a mug
Image by jcomp on Freepik

Weight loss tips: கிரீன் டீயில் காணப்படும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை எரிப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் இது நமது உடலில் மெட்டபாலிசத்தை அதிகரித்து உடல் எடை இழப்பிற்கு உதவுகிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தங்களது உடற்பயிற்சிக்கு பிறகு இந்த கிரீன் டீயை எடுத்துக் கொள்ளலாம். இதனை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளாமல் தினசரி இரண்டு முதல் மூன்று வேலைகளுக்கு மட்டும் குடிப்பது ஆரோக்கியமானதாகும்.

4. ஆப்பிள்:-

Sliced ​​apples for weight loss
Image by Racool_studio on Freepik

ஆப்பிளில் அதிக அளவில் நார்ச்சத்து மற்றும் குறைந்த அளவே கலோரியை கொண்டுள்ளது. நாம் தினமும் தோலுடன் ஒரு முழு ஆப்பிளை சாப்பிட்டு வந்தால் உடல் நல பிரச்சனை என்று மருத்துவரை சந்திக்க வேண்டிய அவசியம் வாழ்நாளில் இருக்காது என்று கூறப்படுகிறது. நீங்கள் தினசரி எடுத்துக்கொள்ளும் கலோரியின் அளவை குறைத்தால் மட்டுமே உங்கள் எடையை குறைக்க முடியும். நம்முடைய தினசரி கலோரியின் அளவை கட்டுப்படுத்துவதற்கு ஆப்பிள் மிகவும் உதவியாக உள்ளது.

5. அவகடோ:-

avocado fruit
Image by stockking on Freepik

வெண்ணெய் பழம் என்று அழைக்கப்படும் அவகடோ நமது உடல் ஆரோக்கியத்திற்கும் உடல் எடை இழப்பிற்கும் சிறந்த ஒரு ஆதாரமாக விளங்குகிறது. இதில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின் சி, புரதம், மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற பல சத்துக்கள் காணப்படுகிறது. உடல் எடையை குறைக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் இந்த பழத்தை சாப்பிட்டு வர இதில் அடங்கியுள்ள அதிகப்படியான நார்ச்சத்து நமது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை எரித்து உடல் எடை இழப்பிற்கு வழிவகிக்கிறது.

இதையும் படியுங்கள் :- 10 நாளில் உடல் எடையை அதிகரிப்பது எப்படி? : உடல் எடையை அதிகரிக்க சாப்பிட வேண்டிய 10 உணவு வகைகள்.!

6. பீன்ஸ்:-

A whole cup of canned beans for weight loss
Image by azerbaijan_stockers on Freepik

Foods for weight loss: நாம் எடுத்துக் கொள்ளும் அனைத்து வகையான பீன்ஸ்களிலும் நார்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக நமது குடல் இயக்கம் சீராக செயல்படுவதோடு மலச்சிக்கல் போன்ற செரிமான கோளாறுகளை சரி செய்து நமது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறது. நமது உடலில் உள்ள தேவையற்ற கழிவுகள் முறைப்படி வெளியேறினாலே உடல் எடையானது படிப்படியாக குறையும். நாம் தினமும் சமையலின் போது காய்கறி வகைகளில் பீன்சை சேர்த்துக் கொள்வது நல்லது. மேலும் இந்த பீன்ஸை வேக வைக்காமல் பச்சையாகவோ அல்லது அரை குறையாக வேக வைத்து சாப்பிடாமல் முழுமையாக வேக வைத்து சாப்பிடுவது மிகவும் அவசியம்.

7. தண்ணீர்:-

 Women drinking a water
Image by teksomolika on Freepik

உங்கள் எடை குறைப்பு பயணத்தின் போது விலை இல்லாமல் கிடைக்கும் தண்ணீர் ஆனது மிகவும் விலைமதிப்புள்ளதாக கருதப்படுகிறது. நீங்கள் உணவு உட்கொள்வதற்கு முன்பு தண்ணீர் குடிக்கும் பொழுது அதிகப்படியான பசி உணர்வை கட்டுப்படுத்தி நம்மை முழுமையாக வைத்திருக்க உதவுகிறது. இதனால் நாம் அதிகப்படியான உணவை எடுத்துக் கொள்ளாமல் கலோரியின் அளவை குறைக்க முடியும். தண்ணீரை சுட வைத்து வெதுவெதுப்பான நிலையில் பருகும் பொழுது உடலின் மெட்டபாலிசத்தின் அளவு அதிகரித்து தேவையற்ற கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. தண்ணீர் குடிக்கும் பொழுது காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது மற்றும் உணவு எடுத்துக் கொள்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு குடிப்பது போன்ற கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும்.

8. கொள்ளு:-

Horse gram
Image by azerbaijan_stockers on Freepik

நாம் அன்றாட வாழ்வில் பலமுறை கேட்டிருக்கும் “இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்கு கொள்ளு” என்ற முதுமொழிக்கு ஏற்ப இந்த கொள்ளு பயறு உடல் எடை குறைக்க விரும்புவர்கபவர்களுக்கான ஒரு சக்தி வாய்ந்த பயறு ஆகும். இந்த கொள்ளு பருப்பை முதல் நாள் இரவு தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் குடித்து வர உடலில் உள்ள தேவையற்ற கெட்ட நீர் கொழுப்புகள் எளிமையாக வெளியேறிவிடும். இதனை நாம் சாப்பாட்டில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் இதில் உள்ள அதிகப்படியான புரதம், வைட்டமின்கள் மற்றும் இரும்பு சத்து ஆகியவை நம் உடலில் காணப்படும் தேவையற்ற கொழுப்பு சதைகளை நீக்கி உடல் எடையை குறைப்பதற்கு உதவுகிறது. மேலும் செரிமான கோளாறு உள்ளவர்கள் இதனை எடுத்துக் கொள்ளும் பொழுது உடலில் உள்ள தேவையற்ற கழிவுகள் நீங்கும்.

9. சியா விதைகள்:-

Chia seeds for weight loss
Image by devmaryna on Freepik

Weight Loss food: நம்முடைய உடல் எடை குறைப்பு பயணத்தின் போது காலை உணவுகளின் வரிசை பட்டியலில் சியா விதைகளுக்கு முக்கிய பங்கு உண்டு. சியா விதைகளில் காணப்படும் நார்ச்சத்து நமக்கு நீண்ட நேரத்திற்கு பசி உணர்வை மறக்க செய்கிறது. இந்த சியா விதைகளை தண்ணீரில் ஊற வைத்து குடிக்கலாம், ஸ்மூத்தி செய்து குடிக்கலாம், பாலுடன் கலந்து எடுத்துக் கொள்ளலாம் மற்றும் பழங்களுடன் ப்ரூட் சாலட்டுகள் செய்து சாப்பிடலாம்.  சியா  விதைகளை அதிகப்படியாக நம் எடுத்துக்கொள்ளும் பொழுது நமக்கு மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்ற செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதில் அதிக அளவு ஒமேகா 3, நீர்ச்சத்து மற்றும் குறைந்த அளவே கார்போஹைட்ரேட்டை கொண்டுள்ளதால் உடல் எடை குறைக்க விரும்புவர்களுக்கு இது ஒரு சிறந்த விதையாகும்.

10. கீரை வகைகள்:-

Spinach
Image by freepik

நாம் உணவில் பயன்படுத்தும் கீரை வகைகளில் ஏராளமான நன்மை தரும் சத்துக்கள் அடங்கியுள்ளது. குறிப்பாக கீரைகள் மிக குறைந்த அளவிலான கலோரிகளையும் அதிகப்படியான கொழுப்பில் கரையக்கூடிய நார்ச்சத்துக்களையும் கொண்டுள்ளது. இதனால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் பாலக்கீரை, வெந்தயக்கீரை, முட்டைக்கோசு, பருப்புக்கீரை மற்றும் ப்ரோக்கோலி போன்ற கீரை வகைகளை உணவில் எடுத்துக் கொள்ளும் போது இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடல் எடையை குறைப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவைகளை பொரியல் செய்தோ, கடைந்தோ, ஸ்மூதிகள் மற்றும் சாலட்டுகளில் சேர்த்து உட்கொள்ளலாம்.

பொறுப்புத் துறப்பு:-
இந்த இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் கல்வி மற்றும் தகவல் நோக்கங்களுக்காக பல தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இவைகளை மட்டும் கொண்டு உடல் நலப் பிரச்சினைகள் அல்லது நோய்களை கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்காக பயன்படுத்தக் கூடாது. உங்கள் உடல் நலம் குறித்து ஏதேனும் கேள்விகள் இருந்தால் தகுதி வாய்ந்த சுகாதார நிபுணர்களின் வழிகாட்டுதலை பெறவும். TamilCare.in தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை மட்டும் கொண்டு நீங்கள் முடிவெடுத்தால் அது உங்கள் சொந்த முயற்சியில்தான் செய்கிறீர்கள். நீங்கள் எடுக்கும் சுயமான முடிவிற்கு இந்த வலைத்தளம் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *